‘மகாலிங்கம் தியறியை’ உருவாக்கிய பேராசிரியர் காலமானார்!

‘மகாலிங்கம் தியறியை’ உருவாக்கிய பேராசிரியர் காலமானார்!

முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மகாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார். எஸ்.மகாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின்  பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது ”மகாலிங்கம் தியறி” என்பது பொறியியல் ஆய்வுத் துறையில் முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்பு!

பேராசிரியர் மகாலிங்கம் லண்டன் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக அவர் கடமையாற்றத் தொடங்கினார். யாழ்ப்பாணம் அளவெட்டியில் இன்றைய தினம் அவரது இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

“தனக்குக் கிடைக்க இருந்த அன்பளிப்பை ஜெட் இயந்திரமாக  வாங்கி பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வழங்கியவர்”

பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற் பீட ஆரம்ப விரிவுரையாளர்களில் ஒருவராக பேராசிரியர் எஸ்.மகாலிங்கம் கடமையாற்றியுள்ளார். 1950ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிததாக பொறியிற் பீடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பேராசிரியர் மகாலிங்கம் கனிஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவராக கடமையாற்றியுள்ளார்.

கனிஸ்ட நிலை விரிவுரையாளர் என்ற ரீதியில் தமக்கு அந்தக் காலத்தில் அதிகளவு வசதிகள் இருக்கவில்லை எனவும் கடமையாற்றுவது சவால் மிக்கது எனவும் பேராசிரியர் மகாலிங்கம் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரின் ஒர் பகுதியாகக் காணப்பட்ட மலேயாவைச் சேர்ந்த மகாலிங்கம், உயர்கல்வியைத் தொடரும் நோக்கில் 1946ம் ஆண்டு இலங்கைக்கு வருகின்றார். மகாலிங்கம் சிலோன் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி இல் இணைந்து கொண்டு பொறியல் துறையில் பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்துள்ளார்.

அப்போதைய மலேயாவில் பல்கலைக்கழகம் இல்லாத காரணத்தினால் அங்கு வாழும் இலங்கையர்கள், இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியைப் பெற மேற்கொள்ள ஆர்வம் காட்டி வந்திருக்கின்றனர்.

இலங்கையில் பொறியில் பீடத்தில் பட்டக் கற்கைநெறியை பூர்த்தி செய்து, 1950ம் ஆண்டு ஜூலை மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் இள விரிவுரையாளர்களில் ஒருவராக பேராசிரியர் மகாலிங்கம் இணைந்து கொண்டார். ஓய்வு பெற்ற பேராசிரியர் அமரர் மகாலிங்கம் அனைத்து இன மாணவர்களின் மத்தியிலும் பிரபல்யமும், நன்மதிப்பும் கொண்டவராகக் காணப்பட்டார்.

(குளோபல் தமிழ் செய்தி)

Share This Post

Post Comment