குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

நேற்றைய தினம் (4/11/2015) தோழர் குமார் குணரட்னம் அவர்கள் சுகயீனமுற்றிருந்த தாயாரை பார்க்க சென்றிருந்த வேளையில் கோகாலை பொலீசாரால் கைது செய்யப்படட்டார். அவரை நாடு கடத்தும் முகமாகவே இந்த கைது நடவடிக்கையினை இலங்கை அரசு மேற்க்கொண்டிருந்தது. தோழர் குமார் அவர்கள் உயிராபத்து காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்ற ஒருவர். நல்லாட்சி புதிய அரசு நாட்டை விட்டு அரசியல் காரணங்களால் வெளியேறிய அனைவரையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் இலங்கைக்கு திரும்பி வந்த தோழர் குமார் இலங்கை பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்திருந்தார்.

குமார் குணரத்தினம்

நல்லாட்சி அரசானது தோழரது விண்ணப்பத்திற்கு பதிலளிக்காது காலத்தை கடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாடு கடத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் முன்னைப்பாக உள்ளது.

தோழர் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமைகளை அங்கரித்து, அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி; நாளை வெள்ளி (6/11/2015) அன்று பகல் 12 மணி முதல் மாலை 2 மணி வரை; லண்டன் இலங்கை தூதராலயம் முன்பாக இலங்கை அரசினை கண்டித்து நிகழவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு  அனைவரையும் அழைக்கின்றோம்.

முன்னிலை சோசலிசக் கட்சி (பிரித்தானிய கிளை)

தொடர்புகளுக்கு: 07782416892 / 07887370469 / 07951322712

காலம்: 6th Friday November 2015; From 12:00 noon to 2:00pm

இடம்: Sri Lankan High Commission in London, 13 Hyde Park Gardens, London W2 2LU

 

Share This Post

Post Comment