எட்மன்ரனைச் சேர்ந்த ”றோனா அம்புறூஸ்” (46 வயது) பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த கனடியப் பொதுத் தேர்தலில் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ஹார்ப்பர் விலகியிருந்தார்.
எட்டுப் பேர் வரையில் இடைக்காலத் தலைமைப் பதவிக்கு விருப்புத் தெரிவித்து உத்தியோகபூர்வமாகக் கடிதங்களைக் கட்சித்தலைமைப் பீடத்திற்குத் அனுப்பி வைத்திருந்தார்கள்.ஆயினும் பழமைவாதக் கட்சி அழகும் இளமையும் கவர்ச்சியும் வல்லமையும் ஒருங்கிணைந்த “றோனா அம்புறூஸ்” அவர்களைத் தெரிவு செய்துள்ளது.
”யஸ்ரின் ரூடோ” போன்ற வசீகரம் பொருந்திய செல்வாக்கு மிகுந்த பிரதமரை எதிர்கொள்ளப் பழமைவாதக் கட்சியும் தன்னையும் தயார்ப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்தத் தேர்வு நிகழ்ந்ததாகக் கருத வேண்டியுள்ளது.