எகிப்துக்கான விமான சேவைகளை ரஸ்யா இடை நிறுத்தியது!

எகிப்துக்கான விமான சேவைகளை ரஸ்யா இடை நிறுத்தியது!

சைனாய் தீபகற்பத்தில் சனிக்கிழமை நடந்த விமான விபத்துக்கான காரணம் உறுதிப்படுத்தப்படும் வரை எகிப்துக்குச் செல்லும் தனது அனைத்து விமான சேவைகளையும் ரஷ்யா இடைநிறுத்தியிருக்கிறது.

ரஷ்ய பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனையின் பேரில் அதிபர் புட்டின் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த விபத்தில் மொத்தம் 224 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யர்கள்.

இந்த விபத்துக்கு என்ன சாத்தியக்கூறான காரணங்கள் இருக்கும் என்பது குறித்து ரஷ்யா கருத்தேதும் தெரிவிக்கவில்லை ஆனால் இது குண்டு ஒன்றால் வீழ்த்தப்பட்டிருக்கக்கூடும் என்று பிரிட்டன் கூறுகிறது.

இந்த விமானம் புறப்பட்ட ஷார்ம் எல் ஷெய்க் வாசஸ்தலத்திற்குச் செல்லவேண்டாம் என்று தம் நாட்டுப் பிரஜைகளை பல ஐரோப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. அல்லது அங்கு தமது நாட்டு விமானங்கள் செல்வதை நிறுத்தியுள்ளன.

பிரிட்டிஷ் விமானங்கள் அங்கு செல்வது இடை நிறுத்தப்பட்டபின்னர், அங்கு சிக்கியிருக்கும் பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளில் முதல் தொகுதியினர் இன்று நாட்டுக்கு திரும்பிக் கொண்டு வரப்படுகின்றனர்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment