இந்தியாவினால், இலங்கை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாவதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கையின் பாதுகாப்பு துறை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு அழுத்தங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், புத்தளத்தில் இருந்து அம்பாந்தோட்டை வரையிலான இலங்கையின் கடற்பகுதி, சீனாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகளவு வியாபித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(யாழ் உதயன்)