Day: November 9, 2015

கந்தையா ஆறுமுகநாதன் (மெக்கானிக் ஆறுமுகம்) – மரண அறிவித்தல்

தையிட்டி மேசன் முத்தையாவின் மகள் கலாஜோதியின் (கலைவண்ணனின் அக்கா) கணவர் கந்தையா ஆறுமுகநாதன் (மெக்கானிக் ஆறுமுகம்- யாழ் தியேட்டருக்கு பக்கத்தில் உள்ள துரைசிங்கம் கராஜ்ஜில் வேலை பார்த்து பின் சவூதி சென்றவர்) ஸ்காபுரோவில் கடந்த சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். கந்தையா ஆறுமுகநாதன் அவர்கள் பசுமைக் கட்சி(Green Party) சார்பில் கடந்த தேர்தலில் பிராம்ரனில் போட்டியிட்ட கார்த்திகாவின் தந்தையாவார். இறுதி அஞ்சலியும் கிரியைகளும் புதன் கிழமை 11.11.2015 பிற்பகல் 5.00 தொடக்கம் பிற்பகல்…

பீகார் தேர்தல் முடிவு வகுப்புவாதத்துக்கு எதிரானது – ஜி.ராமகிருஷ்ணன்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி, சங்க பரிவார் அமைப்புகள் ஹிந்துத்துவா செயல்திட்டத்தை முன்னெடுக்க எடுத்த முயற்சிகளால் ஏற்பட்டது என்கிறார் தமிழ் நாடு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில், பீஹாரில் பிரதமர் நரேந்திர மோடி முன்பு எந்தப் பிரதமரும் செய்யாத வகையில் தீவிரமாக இறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், பீஹார் மக்கள், அவரது கட்சியின் ஹிந்துத்துவா செயல்திட்டத்தை நிராகரித்துவிட்டனர் என்றார். இடதுசாரிக்கட்சிகள் பீஹாரில் படுதோல்வி அடைந்திருப்பதைப்…

காணாமல் போனோர் பற்றிய ஐ.நா குழு இலங்கை வந்துள்ளது!

அரசின் அழைப்பில் அங்கு சென்றுள்ள அந்தக் குழு எதிர்வரும் 18ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு செல்லவுள்ளனர். ஆட்கள் கடத்தி காணாமல் செய்யப்படுவதை தடுக்கவும், அதை முற்றாக ஒழிக்கவும், இலங்கை என்னென்ன வழிகளைக் கையாண்டு வருகிறது என்பது குறித்து அவர்கள் ஆராயவுள்ளனர் என ஐ நாவின் செய்திக் குறிப்பு கூறுகிறது. பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மையக் கண்டறிவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீடுகள் கிடைப்பது ஆகியவற்றில் அரசு இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது…

ஸ்பாபுரோவில் 8.11.2015 ஞாயிறு அன்று கவிஞர் திருமாவளவன் நினைவேந்தல் நிகழ்வில் கீதா சுகுமாரன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி!