அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கவலை!

அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கவலை!

இலங்கை சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தீபாவளிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படுவார்கள் தொடர்பில் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். தாங்கள் எதிர்பார்த்தவாறு தங்கள் உறவுகளுக்கு தீபாவளிக்கு முன்னதாக விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த அரசியல் கைதிகளின் உறவுகள் தீபாவளி பண்டிகைக்கான ஆயத்தங்களையும் மேற் கொண்டிருந்தனர்.

எதிர்பார்தவாறு விடுதலை கிடைக்காததால் இதனால் இந்த ஆண்டு தீபாவளியை தாங்கள் கறுப்பு தீபாவளியகவே அனுசரிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கு பொது மன்னிப்பும் விடுதலையும் கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் தொடருகிறது.

தமிழ் அரசியல் கைதிகளில் சிலருக்காவது தீபாவளிக்கு முன்னர் பிணை கிடைக்கும் என அரசு மற்றும் அரசியல்வாதிகளால் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.

அந்த உத்திரவாதம் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி அவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தீபாவளிக்கு முன்னதாக 32 அரசியல் கைதிகள் முதற்கட்டமாக பிணையில் விடுதலை செய்யப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபகஸ கூட கூறியிருந்ததார் என்பது குறிப்பிடத்தகுந்தது என்றாலும் இதுவரை எவரும் விடுதலை செய்யப்படவில்லை.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment