கில்லர் பரிசு ரொறொன்ரோவைச் சேர்ந்த ஆந்திரே அலெக்ஸிசுக்கு!

கில்லர் பரிசு ரொறொன்ரோவைச் சேர்ந்த ஆந்திரே அலெக்ஸிசுக்கு!

இவ்வருடத்துக்கான Scotiabank Giller பரிசு, ரொறன்ரோவைச் சேர்ந்த André Alexis அவர்களின் Fifteen Dogs என்ற நாவலுக்குக் கிடைத்துள்ளது. கனடாவின் சிறந்த புனைகதையாளருக்கு வருடா வருடம் வழங்கப்படும் இந்த பரிசுக்காக, இம்முறை 168 சமர்ப்பிப்புக்கள் கிடைத்திருந்தன.

சர்வதேசரீதியான ஐந்து நடுவர்களைக் கொண்ட குழு, ரொறன்ரோ மிருக வைத்தியசாலை ஒன்றிலுள்ள 15 நாய்களுக்கு மனித உணர்வுகள் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை உள்ளார்ந்தமாகவும் தத்துவார்த்தமாகவும் ஆராயும் இந்த நாவலை பரிசுக்குரிய நாவலாக தெரிந்திருந்தது.

நவம்பர் மாதம் 10ம் திகதி நிகழ்ந்த விழாவில் 100,000 டொலரும் Banff Centreன் Leighton Artists’ Colonyல் இரண்டு வார வசிப்பிடமும் எழுத்தாளருக்கு பரிசாக வழங்கப்பட்டன. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என வாசகர்களை சிந்திக்க வைப்பதுடன் அவர்களுடைய இருப்பைப்பற்றி ஆராயவைக்கும் இந்த நாவல், நகைச்சுவை, ஆணவம், மிருகத்தனம் போன்றவற்றைக் கொண்டதொரு சமநிலையான, அற்புதமான நாவல் எனச் சொல்லப்படுகின்றது.

-சிறீரஞ்சனி

Share This Post

Post Comment