முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிடியாணை!

ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சியாகிய பெரட்டுகாமி என்ற கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி காணாமல் போயிருந்தனர்.

இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் இருவரும் தடுப்புக்காவலில் இருப்பதாகவும், இவர்கள் இருக்குமிடத்தை வெளிப்படுத்த முடியாதெனவும் ஊடகங்களுக்கு ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்ததாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்லவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுத்த அழைப்பாணைக்கமைய அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்தே யாழ் மாவட்ட நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment