‘இயக்குநர் திலகம்’ கோபாலகிருஷ்ணன் காலமானார்!

‘இயக்குநர் திலகம்’ கோபாலகிருஷ்ணன் காலமானார்!

தமிழ் திரையுலகில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியவரும், ஆழமான கதை வசனத்தால் மக்களை கவர்ந்தவரும், திரை உலகில் ‘இயக்குநர் திலகம்’ என்று அறியப்பட்டவருமான கே எஸ் கோபாலகிருஷ்ணின் இறுதிச் சடங்களில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர் கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த அவருக்கு வயது 86. கே.எஸ்.ஜி என திரையுலகத்தால் அழைக்கப்பட்ட அவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 70க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.

பெண்களைச் சார்ந்த பிரச்சினைகளை பெரும்பாலும் மையமாக வைத்தே அவர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதே நேரம் சமூகத்தில் நடைபெற்றும் வரும் விஷயங்களையும் அவர் ஆழமாக தமது படத்தில் கையாள்வார் என திரை விமர்சகர்கள் கூறுவார்கள்.

அவர் இயக்கிய பல படங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. சாரதா திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது.

தமிழகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த கே ஆர் விஜயவை கற்பகம் திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் கே.எஸ்.ஜி.

குலமா குணமா, பணமா பாசமா, சித்தி, ஆயிரம் ரூபாய், கை கொடுத்த தெயவம் உட்பட அவரது பல படங்கள் பல வாரங்கள் திரையிடப்பட்டு சாதனைகள் படைத்துள்ளன.

மறைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னையில் நடைபெற்றன.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment