இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சுதாகரன்!

இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சுதாகரன்!

இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர் என அண்மையில் விடுதலையான ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது விடுதலையைக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சோர்வடைந்து காணப்படுவதாக மட்டக்களப்புச் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சுதாகரன் கூறுகிறார்.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தான் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்றும் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகள் தனக்கு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவரது கடவுச் சீட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தன்மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது எனவும் சுதாகரன் கூறினார்.

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் பொது மன்னிப்பு அல்லது புனர்வாழ்வுக்கு பின்னரான விடுதலையை எதிர்பார்த்துக் காத்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment