பாரிஸில் நடந்த தாக்குதலை அடுத்து குடியேறிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை மாற்ற வேண்டிய தேவையில்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ழான் கிளாட் யங்கர் தெரவித்துள்ளார். குற்றவாளிகளே வன்முறையில் ஈடுபட்டார்களே தவிர அகதிகள் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் தாக்குதல் மேற்கொண்ட ஆயுததாரிகளில் ஒருவரின் சடலத்திற்கு அருகே சிரிய நாட்டு கடவு சீட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அந்த நபர் கடந்த மாதம் கிரேக்கத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பிரவேசித்திருந்தார் என்பதுடன் செர்பியாவில் அகதியாக தன்னை பதிவு செய்திருந்தார்.
இந்த நபர் தாக்குதல்தாரிகளில் ஒருவரா என்பது குறித்து உறுதிப்படுத்த மேலதிக சோதனைகள் தேவை என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(பிபிசி தமிழோசை)