பக்தி இசைப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!

பக்தி இசைப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!

படம் ; The Hindu

அவருக்கு வயது 95. தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பிறந்த அவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன்.

அவர் சிறுவயதில் முறையாக இசை பயின்றார். பின்னர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றபோது 1936ஆம் ஆண்டு காவல்துறையினர் தாக்குதல் காரணமாக இடது கண்ணில் பார்வையை இழந்தார்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் அவர் பக்தி இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

மத்திய மாநில அரசு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

பல மொழிகளில் புலமை கொண்டிருந்த அவர், பாடகர் என்பதற்கு அப்பாற்பட்டு பாடலாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என பல பல்துறையில் திறமை வாய்ந்தவராகவும் இருந்தார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment