ரஷ்யா ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது கடும் தாக்குதல்!

இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ரஷ்யா கூறுகிறது.

அவர்களுக்கு எதிராக நீண்டதூர ஏவுகணைகளையும் குண்டு வீச்சுக்களையும் நடத்தியுள்ளது என பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளியான தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ எஸ் அமைப்பினர் பலமாக இருக்கும் ரக்கா மற்றும் டியர் எஸ் ஸார் பகுதிகளிலுள்ள அவர்களின் இராணுவ நிலைகள் மீது தமது விமானங்கள் ஏவுகணைகளை வீசின என்றும் வடக்குப் பகுதியில் குண்டு வீச்சுக்கள் நடைபெற்றன என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

கடந்த மாதம் எகிப்திலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று பயங்கரவாத தாக்குதல் காரணமாக விழுந்து நொருங்கியதற்கு தாமே காரணம் என ஐ எஸ் அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அந்த அமைப்பின் மீது பழி வாங்குவது தவிர்க்க முடியாதது என ரஷ்ய அதிபர் விளாமிர் புட்டின் ஏற்கனவே எச்சரித்திருந்தார்

சிரியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஐ எஸ் அமைப்பின் மீது பல நாடுகள் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment