இந்து தேசியவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அஷோக் சிங்கல் தமது 89ஆவது வயதில் காலமானர். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை அவர் குர்கானிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இராமருக்கு ஆலயம் கட்டவேண்டும் எனும் திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தவர்களில் அவரும் ஒருவர்.
எனினும் அந்த முடிவு இன மோதல்கள் ஏற்படுவதற்கு வழி வகுத்தது. முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை கூறி வந்தவராகவும் அவர் அறியப்படுகிறார்.
அவரது மரணம் தனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலஞ்சென்ற அஷோக் சிங்கல் இருந்தார்.
சர்ச்சைகுரியத் தலைவராக இருந்த அவருக்கு அஞ்சலிகள் குவிந்து வருகின்றன. அவர் ஒரு நிறுவனம் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
(பிபிசி தமிழோசை)