இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் : ஜனாதிபதி

இராணுவத்தினர்  விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் : ஜனாதிபதி
போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்திற்கோ அல்லது போர்க் குற்ற விசாரணைக்கோ முன்னிலைப்படுத்த இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தை முன்னெடுத்த இராணுவப் பிரதானிகளை ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இறுதிக்கட்ட யுத்தத்தை முழுமூச்சாக முன்னெடுத்த இராணுவப் பிரதானிகள் 9 பேர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவப் பிரதானிகளிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்புக்கு முரணாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment