இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கலாம் – நிதி அமைச்சர்

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கலாம் – நிதி அமைச்சர்
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு பலியாகியுள்ளது, குறைந்த வருமான நிலையும், வேலை வாய்ப்பின்மையும் அதிகரிக்கலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு செலவு திட்ட உரையில் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2016ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்ட உரையை வாசித்தவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு,
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவேகமாக வளர்ச்சியடைவதாக தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்ட போதிலும்இஉண்மையில் இலங்கையில் பாரிய வெளிநாட்டு கடனிற்குள் சிக்குண்டது.
முன்யை அரசாங்கத்தின் காலத்தில் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும்,அவை கேள்விப்பத்திர நடைமுறைகளை மீறி முன்னெடுக்கப்பட்டன, நல்லாட்சிக்கு அடிப்படையான கொள்கைகளும், வெளிப்படைதன்மையும் மீறப்பட்டன, இதற்கு காரணமானவ குற்றவாளிகளை தப்பவிடுவது எங்கள் நோக்கமல்ல, மாறாக அவர்கள் தங்கள் தவறுகளிற்காக தண்டிக்கப்படுவதே எங்கள் நோக்கம்.
முன்னாள் அமைச்சர் ஓருவர் கொழுழும்பில் ஐக்கியநாடுகள் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதற்கு முன்னைய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்த விதம் காரணமாக வெளிநாடுகளுடனான உறவுகள் பாதிக்கப்பட்டன.
நாங்கள் வெளிநாட்டு உதவிகளை இழந்தோம், ஜிஎஸ்பி பறிபோனது, இது இலங்கையின் பொருளாதாரத்தை மிகமோசமாக பாதித்தது,இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குபலியாகியுள்ளது,குறைந்த வருமானம் மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் சர்வதேச சமூகத்தினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும். ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக நாங்கள் சாதகமான பதில்களை பெற்றுள்ளோம்.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment