கூட்டமைப்பு – முதலமைச்சர் சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது!

கூட்டமைப்பு – முதலமைச்சர் சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது!
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மிக விரைவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் கட்சியில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் கடந்த கால தேர்தல் நேரங்களில் நடந்துகொண்ட விதம், வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளும், கருத்துக்களும் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பலதரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுக்கும், வடக்கு முதலமைச்சருக்கும் இடையில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்சிக்குள் காணப்படுகின்ற இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment