தேர்தல் வாக்குறுதிகளின் படி புலிச் சந்தேக நபர்கள் விடுதலை – மகிந்தா

தேர்தல் வாக்குறுதிகளின் படி புலிச் சந்தேக நபர்கள் விடுதலை – மகிந்தா
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் நேற்று  வழிபாடுகளில் ஈடுபட்டு திரும்பிய போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தரப்பினரை திருப்திப்படுத்த அரசாங்கம் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்கின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட மாட்டாது. ஒரு சில திருத்தங்களைச் செய்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
அவன்ட் கார்ட் நிறுவனம் இந்த நாட்டுக்கு பாரியளவில் சேவையாற்றியுள்ளது. ஏதேனும் பிழைகள் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
மாறாக நிறுவனங்களை மூடி விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நிறுவனத்தை மூடுவதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொழில்களை இழக்க நேரிடும்.
ராஜபக்ஷ குடும்பத்தில் எவரும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபடவில்லை. நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை. விசாரணை நடத்துவார்கள், விசாரணை நிறைவில் எதுவும் இருக்காது என்றார்.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment