வவுனியா நகரப் பகுதியில் மாவீரர் தின சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பஸ்நிலையம், சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி என்பவற்றில் மதில்கள், விளம்பர பலகைகள், வீதிப் பலகைகள் என்பவற்றில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மாவீரர் நாள் நவம்பர் 25 – 27.2015 என தலைப்பிடப்பட்டு ஏ4 அளவிலான தாளில் அச்சிடப்பட்டு மாவீரர் நாளை கோவில்கள், பாடசாலைகள், வீடுகள், பொது இடங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றில் உணர்வெழுச்சியுடன் கொண்டாடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் என அத்துண்டு பிரசுரத்தின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(யாழ் உதயன்)