Day: November 21, 2015

அப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்

 பிறப்பு: September 02 1945  இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும் கனடா ரொறொன்ரோவினை வதிவிடமாகவும் கொண்ட திரு அப்புத்துரை கனகலிங்கம் (ராசா) நவம்பர் 21 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி R.P அப்புத்துரை சிவஞானம்மா தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற திரு நவரட்னம் மற்றும் ஞானபூங்கோதை தம்பதியினரின் அன்பு மருமகனும் நவரஞ்சனி – றஞ்சியின் அன்புக் கணவரும் துஷ்யந்தன் –…

முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் ஐ.எஸ் அமைப்பை நோக்கும் விதம்!

இஸ்லாமிய அரசு அமைப்பை உலகில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் எதிர்மறையாகவே பார்க்கின்றன என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஒரே ஒரு நாடுதான் விதிவிலக்கு. இஸ்லாமிய அரசு என்ற அமைப்பை, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வசிக்கும் மக்கள் பொதுவாக எதிர்மறையாகவே பார்க்கிறார்கள் என்று சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ப்யூ ஆராய்ச்சி மையத்தின் உலக மனோபாவங்கள் குறித்த ஆய்வு ஒன்று பாலத்தீன நிலப்பரப்புகள், ஜோர்டான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கலந்து…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், பெல்ஜிய நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொரோக்கோ வம்சவளியைச் சேர்ந்த அஹமத் தஹ்மானி என்ற இவர், கடற்கரை நகரான அன்டாலயாவிலுள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான இவர், பாரிஸில் தாக்குதலை நடத்தியவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என தாம் நம்புவதாக, துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ஒரு வாரத்திற்கு முன்னர் நெதர்லாந்திலிருந்து துருக்கிக்கு வந்துள்ளார்…

இலங்கை அரசு பல தமிழ் அமைப்புகள் மீதான தடையை  நீக்கியுள்ளது!

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவை என்று கருதப்பட்ட பல அமைப்புக்கள் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.  copyrightgov.lk ஆனாலும், தமிழீழ விடுதலைப்புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மற்றும் ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என வெள்ளிக்கிழமை இரவு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடியன் தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ் உட்பட, ஏனைய சில அமைப்புக்களின மீதான…

ஐ.எஸ் அமைப்பை இல்லாமல் ஆக்குதற்கு ஐ.நா தீர்மானம்!

இராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஒருமனதாகத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பை ஒழிப்பதில் பாதுகாப்பு சபையிலுள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சியில் எவ்வித சுணக்கமும் இருக்காது என அச்சபையின் தலைவரும் ஐ.நாவுக்கான பிரிட்டிஷ் தூதருமான மேத்யூ ரைகிராஃட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐ எஸ் அமைப்பின் கொடூரங்களுக்கு ஒரு அளவில்லை எனவும் அவர் கூறுகிறார். உலகெங்கும் தாக்குதல் நடத்துவது என ஐ எஸ் அமைப்பு உறுதிபூண்டுள்ளதை எதிர்த்துப்…