பாரிஸ் தாக்குதலில் தொடர்புடையவர் என துருக்கியில் ஒருவர் கைது!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், பெல்ஜிய நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொரோக்கோ வம்சவளியைச் சேர்ந்த அஹமத் தஹ்மானி என்ற இவர், கடற்கரை நகரான அன்டாலயாவிலுள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான இவர், பாரிஸில் தாக்குதலை நடத்தியவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என தாம் நம்புவதாக, துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஒரு வாரத்திற்கு முன்னர் நெதர்லாந்திலிருந்து துருக்கிக்கு வந்துள்ளார் எனவும், அவர் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் இருவருடன் சிரியாவுக்குள் செல்ல தயாராகி இருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment