அமெரிக்காவுக்கான ஐ.நா அமைப்பின் நிரந்தரப் பிரதிநிதி யாழ். விஜயம்!

அமெரிக்காவுக்கான  ஐ.நா அமைப்பின் நிரந்தரப் பிரதிநிதி  யாழ். விஜயம்!

இலங்கை வந்துள்ள ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர், இன்று ஞாயிறன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடக்கு மாகாண ஆளுனர் பளிஹக்கார, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.

யாழ் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்ட அவர், அவற்றை நவீன முறையில் பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவிபுரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பின்போது, வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டியதன் அவசியம் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமெரிக்க பிரதிநிதியிடம் கோரிக்கை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment