இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படகூடும் எனும் அச்சுறுத்தல்கள் தொடருவதால் நாட்டின் தலைநகர் இந்த அதிகபட்ச உஷார் நிலை நீட்டிக்கப்படுகிறது.
பாரிஸில் நடைபெற்றது போன்ற தாக்குதல்கள் அங்கு நடைபெறாமல் தடுப்பதற்காகவே இந்த தயார் நிலை என்று கூறப்படுகிறது.
நாளை-திங்கட்கிழமை பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தலைநகரின் மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆகியவை மூடப்பட்டிருக்கும் என பிரதமர் சார்லஸ் மிச்சல் கூறியுள்ளார்.
நாட்டின் இதர பகுதிகளிலும் மேம்பட்ட அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன எனவும் பெல்ஜியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் பிரஸல்ஸில் மேலும் கூடுதலாக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்படுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் இந்த மிக அதிகபட்ச உஷார் நிலை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைகள், உணவு விடுதிகள், பொதுக் கட்டிடங்கள் ஆகியவை மூடும் நிலை ஏற்பட்டது.
(பிபிசி தமிழோசை)