பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸின் மெட்ரோ ரயில் பாதை இன்று ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பகுதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமைகள் மறுஆய்வு செய்யப்படும் வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அதே போன்று பெல்ஜியத்திலும் இடம்பெறலாம் எனும் எச்சரிக்கை காரணமாக, நாடு முழுவதும் அதியுயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடைகள், அருங்காட்சியங்கள் சனிக்கிழமைமூடப்பட்டன. பல பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாரிஸ் தாக்குதல்களை நடத்தியவர்களில் ஒருவர் என நம்பப்படும் சாலாஹ் அப்தஸ்லாம் பெல்ஜியத்துக்கு தப்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்டாலும் நாட்டுக்கான அச்சுறுத்தல் நீங்காது என்கிறார் பெல்ஜியத்தின் உள்துறை அமைச்சர்.
பல சந்தேக நபர்களால் நாட்டுக்கு இன்னும் நேரடியாக அச்சுறுத்தல் உள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
(பிபிசி தமிழோசை)