அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாணவன் தற்கொலை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி  மாணவன் தற்கொலை
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, பாடசாலை மாணவன் ஒருவன் கோண்டாவில் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த மாணவன், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு கடிதத்தை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
கோப்பாய் வடக்கில் வசிக்கும் ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
.
குறித்த மாணவன் யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பில் கற்றுவந்துள்ளார்.
சடலம் நீதவான் விசாரணக்காக குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(யாழ் உதயன்)

Share This Post

Post Comment