கைக்கடிகாரங்களை அறக்கட்டளைக்கு அளித்தது FIFA

கைக்கடிகாரங்களை அறக்கட்டளைக்கு அளித்தது FIFA

கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட 48 ஆடம்பர கைக்கடிகாரங்களை பிரேஸிலில் கால்பந்து திட்டங்களை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாக அளித்துள்ளதாக, சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா தெரிவித்துள்ளது.

மிகவும் விலைகூடிய இந்த பார்மியானி கைக்கடிகாரங்கள் பிரேஸில் கால்பந்து சங்கத்தால் ஃபிஃபா உயர் அதிகாரிகளுக்கும் தேசிய கால்பந்து சங்கங்களின் தலைவர்களுக்கும் கொடுக்கப்பட்டன.

இந்தக் கைக்கடிகாரங்கள் அங்கீகரிக்கப்படாத பரிசுகள் என்றாலும் அவற்றை தம்மிடம் ஒப்படைத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான கட்டுப்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது

அந்தக் கடிகாரங்கள் ஒவ்வொன்றும் 24,500 அமெரிக்க டாலர் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment