எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பனி ஏரி ஒன்று உருகிறது!

எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பனி ஏரி ஒன்று உருகிறது!

எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பனி ஏரி ஒன்று உருகி சாதாரண ஏரிகளாக உருவெடுத்துக்கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தப் பகுதியில் பனிக்கட்டிப் பிரதேசங்கள் குறைவதைக் காட்டும் மிகச் சமீபத்திய சமிக்ஞையாக அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஏரிகள் முதலில் சிறு சிறு குளங்களாக உருவாகி பின்னர் ஒன்றாக இணைகின்றன. இதன் மூலம், கும்பு பனிஏரியை உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயலும் மலைஏறிகள் கடப்பது மேலும் கடினமாகும்.

அவை நிரம்பி வழிந்தால், மலையின் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் பிற கட்டுமானங்கள் பாதிப்புக்குளாகக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் 15 ஆண்டு காலமாக எடுக்கப்பட்ட செய்கோள் படங்கள் மற்றும் மூன்று கள ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பனி ஏரி ஒன்று உருகி வழிந்து நீர்மின்சார நிலையம் ஒன்றை அழித்துவிட்டது.

மற்ற இமாலய பனி ஏரிகளிலும், தண்ணீர் ஏரிகள் உருவாகியிருக்கின்றன. ஆனால் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால், கும்பு பனிஏரியில் இந்தப்பிரச்சனை ஏற்படுவதாகத் தெரிவது இதுதான் முதல் முறையாகும்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment