அரசாங்கத்தின் அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்ற முறையில் திருத்தம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் மாத்திரமே வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதாகவும் ஆனால் நிதி ஒதுக்கீடுகள் இல்லை என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் சம்பந்தன் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.