பிரிட்டன் டேவிஸ் கோப்பையை வென்றது!

பிரிட்டன் டேவிஸ் கோப்பையை வென்றது!

உலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது.

மிகவும் பெருமை வாய்ந்த இந்தக் கோப்பையை பிரிட்டன் அணி 1936ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வென்றுள்ளது.

தனி நபர்களுக்கு இடையேயான கடைசிப் போட்டியில் ஆண்டி மர்ரி பெல்ஜியத்தின் டேவி கோஃபினை வென்றதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது.

இறுதி போட்டி நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என, போட்டிக்கு பிறகு அவை இடம்பெற்ற ஹெண்ட் நகரில் பேசும்போது கூறினார்.

டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என அவர் அப்போது தெரிவித்தார்.

ஆண்டி மர்ரி ஒரு முழுமையன சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார் என பிரிட்டிஷ் அணியின் தலைவர் லியான் ஸ்மித் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 105 ஆண்டுகளாக நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை போட்டிகள் அனைத்திலும் பிரிட்டன் பங்குபெற்றிருந்தாலும், பத்து முறை மட்டுமே அதை வென்றுள்ளது.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment