“ஓசன் லேடி” மற்றும் “எம்வி சண் சீ” கப்பல்களில் வந்தவர்களுக்கு என்ன நடக்கும் ?

“ஓசன் லேடி” மற்றும் “எம்வி சண் சீ” கப்பல்களில் வந்தவர்களுக்கு என்ன நடக்கும் ?

அகதிகளாக இடம் பெயர்ந்து கனடாவுக்கு வருபவர்கள் தங்களுக்குள் உதவி செய்து கொள்வது அல்லது ஏனைய அகதிகளுக்கு உதவி செய்வது போன்றவற்றை  ஆட்கடத்தல் எனக் கொள்து  ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கனேடிய உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கை அகதிகளை சட்டவிரோத குடியேறிகள் என்ற வகையில் தடுத்து வைக்கும் கனேடிய சட்டத்தின் பகுதிகள், அனைத்துலக அகதி சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக   கனேடிய உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் “பெவரெலி மிச்செலின்” தெரிவித்துள்ளார்.

2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் கனடாவுக்கு தமிழ் அகதிகளுடன் வந்த “ஒசன் லேடி” மற்றும் “எம்வி சண் சீ” கப்பல்கள்  தொடர்பான வழக்கு விசாரணையின் போதே பிரதம நீதியரசர் இந்த முடிவினை வெளியிட்டார்.

“எம்வி சண் சீ” கப்பலைப் பொறுத்தவரையில் தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட பின்னர் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமது உறவுகள் மற்றும் ஏனைய அகதிகளை கவனித்தவர்களை கடத்தலுக்கு உதவினார்கள் எனக் குற்றம் சுமத்துவது சட்டத்துக்கு முரணானது என்று பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்

கப்பலில் பணியாற்றியவர்கள் மற்றும் குளிரில் நடுங்கும் மகளுக்கு போர்வையை போர்த்திவிட்ட தந்தை, உணவு வழங்கியவர்கள் என்போர் ஆட்கடத்தல்களுக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ஹாப்பரின் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட நீதிமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அந்த முறைமைகள் அகதிகள் சட்டத்தைப் புறந்தள்ளும் செயல்முறை என்று பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் “எம்வி சண் சீ” கப்பல் மூலம் 2010ம் ஆண்டு கனடாவுக்கு வந்த சுமார் 500 அகதிகளும் “ஓசன் லேடி” கப்பலிலே வந்த அகதிகளும் கனடிய அரசினால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“ஓசன் லேடி” கப்பல் மூலம் கனடாவுக்கு 76 அகதிகளைக் கொண்டு வந்தமைக்காகப் பணம் வாங்கினார்கள் என்பதன் அடிப்படையில்  நான்கு பேர்களை கடத்தல்காரர்களாக கருதி விசாரணைகளை நடைபெற்று வருகிறது.

Share This Post

Post Comment