Month: December 2015

“தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம்”

தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு ஞாயிறன்று யாழ் பொது நூலக மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இராணுவம் ஒத்துழைக்க அமெரிக்கா வலியுறுத்து

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் நம்பகமான நீதிப்பொறிமுறைக்குப் படையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.அத்துடன், படைத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டுமெனவும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மூன்று நாள் பயணமாக கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கலாநிதி அமி சீரைட்,  இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம், இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார். கடந்த…

ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது

கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறியுள்ளது. ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது இது கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர்…

தலிபான்களிடம் வீழ்ந்துகொண்டிருக்கும் ஹெல்மண்ட்

தெற்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான சண்டை நடக்கிறது. அங்கு கேந்திர முக்கியத்துவம் மிக்க சங்கின் மாவட்டத்தில், தலிபான்களிடம் இருந்து பாதுகாப்பு படைகள் பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றன. யாருடைய கை அங்கு ஓங்கியுள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தலிபான்கள் மீண்டும் பெரும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், ஹெல்மண்ட் மாகாணத்தை தக்க வைத்துக்கொள்ள ஆப்கான் படைகள் தடுமாறுகின்றன. (பிபிசி தமிழோசை)

தமிழ்நாட்டுக்கு 26000 கோடி தேவை – ஜெயலலிதா கோரிக்கை

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள 25,912 கோடி ரூபாய் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செவ்வாயன்று எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தில் பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக, மாநிலத்தின் உள்கட்டமைப்பிற்குக் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தை மத்தியக் குழு பார்வையிட்டிருந்தாலும், அந்தக் குழுவினர் பார்வையிட்டுச் சென்ற பிறகு தான் நான்காவது முறையாகப் பெரும் மழை பெய்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மழை…

திருக்கோணேஸ்வரர் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு தடை!

இலங்கையில் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் இடம்பெற்றுவரும் கட்டுமான பணிகளுக்கு தொல் பொருள் ஆய்வுத் தினைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருக்கோணேஸ்வர கட்டுமானப் பணிகளுக்கு தடை ஆலய உள் வீதியில் தேர் வலம் வருவதற்காக ஒன்பது தூண்கள் எழுப்பப்பட்டு கூரை அமைப்பதற்கும் உத்தேசித்துள்ள ஆலய நிர்வாகம் அதற்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்துள்ள நிலையிலே பணிகளை இடைநிறுத்துமாறு தொல் பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆலய பரிபாலன சபையின் தலைவரான பி.பரமேஸ்வரன்.…

இலங்கை : வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது

இலங்கை நாடாளுமன்ற வரவு செலவுத்திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் கிடைத்தன. ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் அதனை ஆதரித்து வாக்களித்தனர். 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும், அதன் நாடாளுமன்ற…

யாழ்ப்பாணத்தில் கனடிய தூதுவர் செல்லி வைட்டிங்

யாழ். மாவட்டத்தில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் மையத்தினை அமைக்கவும் அதற்கான ஆலோசனைகளும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க கனேடிய அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் தெரிவித்தார். வடமாகாணத்திற்கான இரண்டுநாள் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த அவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். கனேடிய அரசாங்கத்தின்…

மாவோ  எழுதிய கடிதம் 9 லட்சம் டாலருக்கு ஏலம்!

சீனாவின் கம்யூனிஸத் தலைவர் மாவோ சேதுங் 1937-ம் ஆண்டில் எழுதியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் ஒன்று லண்டனில் 9 லட்சம் டாலருக்கும் அதிக விலைக்கு ஏலம்போயுள்ளது. மாவோ கையொப்பம் இட்டுள்ள இந்தக் கடிதம், அப்போதைய பிரிட்டிஷ் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கிளெமென்ட் அட்லீக்கு எழுதப்பட்டுள்ளது. ‘மிகவும் அரிதானது’ என்று இந்தக் கடிதத்தை ஏலத்தில் விற்ற நிறுவனம் வர்ணித்திருந்தது. சீனா மீதான ஜப்பானின் படையெடுப்புக்கு எதிராக பிரிட்டன் நடைமுறை ரீதியான உதவிகளை வழங்கவேண்டும் என்று மாவோ அந்தக்…

துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய நபர் கைது : விமான நிலையத்தில் பரபரப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய வேளையில் முக்கிய விருந்தினர்கள் வரும் பகுதியில் துப்பாக்கியுடன் நடமாடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். ஜனாதிபதியின் விமானம் தரையிறங்கிய வேளையில்  முக்கிய விருந்தினர்கள் வரும் பகுதியில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த ஒருவரை விமானநிலைய பொலிஸார் கைது…