ஃபேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg நிறுவனத்தில் தனக் குள்ள 99 சதவீத பங்குகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். இவற்றின் மதிப்பு 4,500 கோடி டாலராகும் (சுமார் ரூ.3 லட்சம் கோடி).
கடந்த வாரம் தனக்கு பிறந்த பெண் குழந்தை மாக்ஸ் பற்றி ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
தனது குழந்தை வாழ்வதற்கு ஏற்ற உலகாக இப்புவி மாறு வதற்கு உதவியாக இத்தொகை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் குழந்தை பிறந்திருந்தாலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்பட்டது. பிறந்த குழந்தை யின் எடை 3.5 கிலோவாகும்.
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளிடையே சம நிலை உருவாக வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜுகர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 2,220 வார்த் தைகளைக் கொண்ட தனது கடிதத்தில் சுகாதாரம், கல்வி, இணையதள வசதி, கற்கும் வசதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஜுகர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் குறிப்பிட்டுள்ளனர்.
31 வயதாகும் ஜுகர்பெர்க் தனது நிறுவனமான ஃபேஸ்புக்கில் தமக்குள்ள 99 சதவீத பங்குகளை இதுபோன்ற பணிகளுக்கு ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையிலான கல்வி, நோய்களை குணப்படுத்துவது, இணையதள இணைப்பு வசதி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஜுகர்பெர்க்கும், பிரிசில்லா சானும் இதுவரை 160 கோடி டாலரை தொண்டு பணிகளுக்கென அளித்துள்ளனர்.
இந்த ஆண்டில் பல்வேறு தொண்டுப் பணிகளுக்கு அவர்கள் அதிகம் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு இண்டர்நெட் இணைய வசதியை ஏற்படுத்துவது, சான்பிரான் சிஸ்கோவில் உள்ள பொது மருத்துவமனையில் இணையதள வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு அளித்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில்தான் குழந்தை நல மருத்துவராக பிரிசில்லா பணியாற்றுகிறார்.
(தி இந்து)