அமெரிக்க தாக்குதலில் சிரிய இராணுவத்தினர் கொலை ?

அமெரிக்க தாக்குதலில் சிரிய இராணுவத்தினர் கொலை ?

சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கத்தலைமையிலான கூட்டுப்படையினரால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் விமானத் தாக்குதலில் சிரியநாட்டு அரச படையைச் சேர்ந்தவர்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

டீர் அல் ஜோர் மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை சிரிய அரசாங்கம் கண்டித்துள்ள நிலையில், அதனை அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றும் வர்ணித்துள்ளது.

ஆனால் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிரிய இராணுவத்தளம் மீது, தமது ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் மறுத்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டால், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் சிரியாவில் குண்டுத் தாக்குதல்களை துவங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முதல் சம்பவமாக இது இருக்கும்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment