ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான, காந்தஹாரில், விமான நிலையத்தின் மீது தாலிபான் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் , குழந்தைகள் உட்பட 37 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேட்டோ மற்றும் ஆப்கான் ராணுவத் தலைமையகம் கூட்டாக இயங்கும் அலுவலகம் அமைந்துள்ள இந்த விமான நிலைய வளாகத்துக்குள் ஒரு தீவிரவாதி இன்னும் மோதலில் ஈடுபட்டிருக்கிறான் என்று செய்திகள் கூறுகின்றன.
இதில் ஈடுபட்ட வேறு ஒன்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை ஏராளமான ஆயுதங்களுடன் தாலிபான் போராளிகள் இந்த பலமாகப் பாதுகாக்கப்பட்ட தளத்தின் மீது நுழைந்து இத்தாக்குதலைத் தொடங்கினர்
பிற தாலிபான் போராளிகள் விமானதளத்துக்கு அருகிலுள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தைக் கைப்பற்றி அவர்களது தாக்குதலுக்கு ஆதரவாக அக்கட்டிடத்திலிருந்து துப்பாக்கிகளால் சுட்டவண்ணம் இருந்தனர்.
(பிபிசி தமிழோசை)