மூன்றாவது தற்கொலை தாக்குதலாளியின் அடையாளம் தெரிந்தது!

மூன்றாவது தற்கொலை தாக்குதலாளியின் அடையாளம் தெரிந்தது!

பாரிஸில் கடந்த மாதம் பட்டாக்லான் இசையரங்கில் தாக்குதல் நடத்தியிருந்த மூன்றாவது தற்கொலை தாக்குதலாளியையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

வட-கிழக்கு பிரான்ஸில் உள்ள ஸ்த்ராஸ்போக் நகரைச் சேர்ந்த பெளத் மொஹமட் அக்காட் என்ற 23-வயது இளைஞனே அவர் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

2013-ம் ஆண்டில் தனது சகோதரனுடன் சிரியாவில் போரிடுவதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.

ஆனால், அவர் எப்போது பிரான்ஸுக்கு திரும்பினார் என்று தெரியவில்லை.

மற்ற மூன்று தாக்குதலாளிகளின் பெயர்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

பாரிஸ் தாக்குதல்களில் பலியான 130 பேரில் அனேகமானவர்கள் பட்டாக்லான் இசையரங்கில் நடந்த கொலைகளில் தான் உயிரிழந்தனர்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment