வெள்ள நிவாரணப் பணிக்கு HYUNDAI கார் நிறுவனம் 2 கோடி அன்பளிப்பு

வெள்ள நிவாரணப் பணிக்கு HYUNDAI கார் நிறுவனம் 2 கோடி அன்பளிப்பு
இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் பல வெளிநாட்டு கார்  தயாரிப்பு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் நிறுவி கொழுத்த பணம் சம்பாதிக்கிறார்கள்.
அவையனைத்திலும் விதிவிலக்கானதாகவும் முன்மாதிரியாகவும் ஹண்டேய் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
அண்மையில் சென்னையில் நிகழ்ந்த பெருவெள்ள அனர்த்தத்தினைக் கவனத்திற் கொண்டு தனது பங்காக தமிழ்நாடு முதலமைச்சரின் வெள்ள அனர்த்த நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய்களை இந் நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது. இதற்கான காசோலையை ஹண்டேயின் சென்னைப்பிராந்திய நிர்வாக இயக்குனர் வை. கே. கூ அவர்கள் நேற்றுச் செல்வி. ஜெயலலிதாவிடம் தலைமைச் செயலகத்தில் கையளித்தார்.

Share This Post

Post Comment