சீனாவின் கடுமையான ‘ஒரு-பிள்ளை’ கொள்கைக்கு புறம்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தினால் பதிவுசெய்யப்படாமல் இருந்த மில்லியன் கணக்கான பிள்ளைகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவுள்ளனர்.
அதிகாரபூர்வ அடையாள அட்டை இல்லாமல், இவ்வாறான பெருமளவிலான பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு போகமுடியாமலும் மருத்துவ சிகிச்சைகளை பெறமுடியாமலும் சிரமப்பட்டுவருகின்றனர்.
பதிவுசெய்யப்படாதுள்ள சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் பேருக்கு அதிகாரபூர்வ ஆவணங்கள் கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
வீடற்றவர்கள் உள்ளிட்ட ஏனைய குழுக்களுக்கும் இந்த ஆவணங்கள் கொடுக்கப்படவுள்ளன.
சீனாவில் எல்லாக் குடும்பங்களும் இரண்டு பிள்ளைகளை பெறுவதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதாக கடந்த அக்டோபரில் சீனா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பிபிசி தமிழோசை)