லஞ்ச, ஊழல் குறித்து முறையிட இணையத்தளம் – இலங்கை அரசு

லஞ்ச, ஊழல் குறித்து முறையிட  இணையத்தளம் – இலங்கை அரசு

பெருகிவரும் லஞ்ச, ஊழலை தடுக்கும் நோக்கில் அதையிட்டுப் பொதுமக்கள் எவரும் அச்சமின்றி முறையிட்டுக் கொள்ள ஏதுவான வகையில் இலங்கையரசினால் www.ipaidabribe.lk என்ற இணையத்தளம் நேற்று வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் லஞ்ச, ஊழல்களுக்கு எதிரான தினத்தில் நிகழ்ந்த இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கையில் லஞ்ச, ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவின் தலைவர் டி. டி. விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சேவையை வழங்கக்கூடியவகையில் இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் லஞ்ச, ஊழல் கெடுபிடிகள் அபரிமிதமாகத் தலைவிரித்தாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை எண்பத்தைந்தாவது இடத்திலுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment