2016 ஆம் ஆண்டு கனடாவில் உணவுப்பொருட்களின் விலை 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதத்துக்குள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடிய டொலரின் வீழ்ச்சி, காலநிலை மாற்றம், நுகர்வோரின் மாறிவரும் போக்கு ஆகியன இந்த விலையேற்றத்திற்கான மிகமுக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.
சராசரியாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் 2015 இல் உணவுப்பொருட்களுக்காக மாதாந்தம் செலவிடும் மொத்தப்பணத்திலும் பார்க்க அதேயளவு பொருட்களுக்கு 2016 இல் மேலதிகமாகக் குறைந்தபட்சம் 345 கனேடிய டொலர்களைச் செலவிடவேண்டியிருக்கும்.
மாமிசத்தின் விலை குறைந்தபட்சம் 4.5 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதானது பலரையும் தாவரபட்சணிகளாக மாற்றம் கொள்ள வைக்கலாமென்று எதிர்வு கூறப்படுகின்றது.
கனடாவில் நுகர்வோருக்குத் தேவையான பழங்கள், மரக்கறி வகைகளில் எண்பதுவீதமானவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.