புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான உடன்பாடு ஒன்று பாரிஸ் உச்சிமாநாட்டில் எட்டப்பட்டுள்ளது.
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சி மற்றும் ஆர்வத்துடன் பிரெஞ்ச் வெளியுறவு அமைச்சர் லாரன் ஃபாபியூஸ் மரச்சுத்தியல் ஒன்றை மேசையின் மீது தட்டி வெளிப்படுத்தினார். இதையடுத்து குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மாநாட்டுப் பிரதிநிதிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவியும், பலத்த கரகோஷத்தை எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
வெற்றியின் இந்த பெருமிதம் பல நிமிடங்கள் நீடித்தன. உலகளவில் புவி வெப்பமடைவதை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் தடுக்க இந்த உடன்பாடு வழி செய்கிறது.
இந்த உடன்படிக்கை சமன்பாடு கொண்ட வகையில் நியாயமக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் ஒன்று எனவும் பிரெஞ்ச் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு சீராக சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்யப்படும்.
(பிபிசி தமிழோசை)