கொலம்பியாவின் பெரிய கிளர்ச்சிப் படையான ஃபார்க் இயக்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகளுக்கு பலவந்தமாக கருக்கலைப்பு செய்துவைத்த குற்றச்சாட்டில் ஸ்பெயின் காவல்துறையினர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்-இல் மருத்துவ தாதியாக இவர் பணியாற்றி வந்துள்ளார்.
அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொலம்பிய அதிகாரிகள் கோரியுள்ளனர்.
தாங்கள் கருக்கலைப்பு செய்யவைக்கப்பட்டதாக குறைந்தது 150 பெண்கள் தங்களிடம் சாட்சியமளித்துள்ளதாக கடந்த வெள்ளியன்று கொலம்பியா தெரிவித்தது.
பெண்களை மோதல் களத்தில் வைத்திருப்பதற்காக, கட்டாயமாக கருக்கலைப்பு செய்துவிடும் கொள்கையை ஃபார்க் கிளர்ச்சிக் குழு கொண்டிருந்ததாக ஆதாரங்கள் உள்ளதாக கொலம்பியாவின் அட்டார்னி ஜெனரல் கூறியுள்ளார்.
(பிபிசி தமிழோசை)