இன்று 15 – 12 – 2015 செவ்வாய்க்கிழமை முதல் ஒன்ராரியோ மாகாணத்தில் பியர் குடிகை பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒன்ராரியோ மாகாண முதல்வர் கத்லீன் வைன் 6 குடுவைகள் கொண்ட beer மதுபானத்தை ரொரொன்ரோவிலுள்ள Loblaws வர்த்தக நிலையத்தில் இன்று கொள்வனவு செய்து விற்பனையை ஆரம்பித்துவைத்தார்.
முதற்கட்டமாக Loblaws, Walmart, Metro, Sobeys உள்ளடங்கலாக 13 பெரிய கடைகளில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபான விற்பனையானது இவ்வருட முடிவிற்குள் 60 கடைகளுக்கு விஸ்தரிக்கப்படவிருப்பதுடன், இவற்றில் 12 எண்ணிக்கையானவை சிறிய அளவிலான விற்பனை நிலையங்களென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்திற்குள் மாகாணம் தழுவியரீதியில் 450 சிறிய பெரிய அளவிலான விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனைசெய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்போவதாகவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் Loblaws நிறுவனமானது Real Canadian Super Store, Fortinos அடங்கலான தமது 19 விற்பனை நிறுவனங்களில் Beer மதுபானம் விற்பனைசெய்யப்படுமென அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கியமாக 6 குடுவைகள் கொண்ட பியர் மதுபானம் மட்டுமே இவ்விற்பனைநிலையங்களில் கொள்வனவுசெய்யமுடியுமென்பது குறிப்பிடத்தக்கது.