Day: December 16, 2015

யாழ்ப்பாணத்தில் கனடிய தூதுவர் செல்லி வைட்டிங்

யாழ். மாவட்டத்தில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் மையத்தினை அமைக்கவும் அதற்கான ஆலோசனைகளும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க கனேடிய அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் தெரிவித்தார். வடமாகாணத்திற்கான இரண்டுநாள் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த அவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். கனேடிய அரசாங்கத்தின்…

மாவோ  எழுதிய கடிதம் 9 லட்சம் டாலருக்கு ஏலம்!

சீனாவின் கம்யூனிஸத் தலைவர் மாவோ சேதுங் 1937-ம் ஆண்டில் எழுதியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் ஒன்று லண்டனில் 9 லட்சம் டாலருக்கும் அதிக விலைக்கு ஏலம்போயுள்ளது. மாவோ கையொப்பம் இட்டுள்ள இந்தக் கடிதம், அப்போதைய பிரிட்டிஷ் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கிளெமென்ட் அட்லீக்கு எழுதப்பட்டுள்ளது. ‘மிகவும் அரிதானது’ என்று இந்தக் கடிதத்தை ஏலத்தில் விற்ற நிறுவனம் வர்ணித்திருந்தது. சீனா மீதான ஜப்பானின் படையெடுப்புக்கு எதிராக பிரிட்டன் நடைமுறை ரீதியான உதவிகளை வழங்கவேண்டும் என்று மாவோ அந்தக்…

துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய நபர் கைது : விமான நிலையத்தில் பரபரப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய வேளையில் முக்கிய விருந்தினர்கள் வரும் பகுதியில் துப்பாக்கியுடன் நடமாடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். ஜனாதிபதியின் விமானம் தரையிறங்கிய வேளையில்  முக்கிய விருந்தினர்கள் வரும் பகுதியில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த ஒருவரை விமானநிலைய பொலிஸார் கைது…

பெஷாவர் பள்ளிகூடத் தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்து இராணுவப் பள்ளிக்கூடத்தில் நிறைய பேர் பலியான படுகொலை சம்பவத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இன்று புதன்கிழமை அந்நாட்டின் பல இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. பாகிஸ்தானின் சரித்திரத்தில் நடந்த மிகக் கொடூரமானத் தாக்குதல்களில் ஒன்றான இச்சம்பவத்தில், மாணவர்கள் ஆசிரியர்கள் அடங்கலாக நூற்றைம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் நடந்த நினைவு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கலந்துகொண்டார். இந்த நினைவு தினத்திஅ முன்னிட்டு அப்பிராந்தியத்திலுள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை…

தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே, அவர்கள் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, இந்தக் கைதிகளை…

நடைமுறை மரபு தொடரும்…..அனைவரும் அர்ச்சகராகத் தடையில்லை

உரிய பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழி செய்யும் தமிழக அரசின் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பில், தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி மட்டுமே கோவிலின் அர்ச்சகர்களை நியமிக்கும் நடைமுறை/மரபு எங்கெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதோ அங்கே அந்த நடைமுறையும் மரபும் அப்படியே தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியான நியமனங்கள் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்…