துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய நபர் கைது : விமான நிலையத்தில் பரபரப்பு

துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய நபர் கைது : விமான நிலையத்தில் பரபரப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய வேளையில் முக்கிய விருந்தினர்கள் வரும் பகுதியில் துப்பாக்கியுடன் நடமாடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
ஜனாதிபதியின் விமானம் தரையிறங்கிய வேளையில்  முக்கிய விருந்தினர்கள் வரும் பகுதியில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த ஒருவரை விமானநிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் மேற்கொண்ட சோதனையின்போது அவரது கால் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மில்லி மீற்றர் 9 ரக கைத்துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர் சிவில் விமான சேவை அதிகாரி என்று தெரியவந்துள்ளதோடு, அவரை விசாரணை இன்றி விடுதலை செய்யுமாறு சிவில் விமான சேவை உயர் பீடத்திலிருந்து பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை துப்பாக்கியுடன் நெருங்கிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(யாழ் உதயன்)

Share This Post

Post Comment