பெஷாவர் பள்ளிகூடத் தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

பெஷாவர் பள்ளிகூடத் தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்து இராணுவப் பள்ளிக்கூடத்தில் நிறைய பேர் பலியான படுகொலை சம்பவத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இன்று புதன்கிழமை அந்நாட்டின் பல இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

பாகிஸ்தானின் சரித்திரத்தில் நடந்த மிகக் கொடூரமானத் தாக்குதல்களில் ஒன்றான இச்சம்பவத்தில், மாணவர்கள் ஆசிரியர்கள் அடங்கலாக நூற்றைம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் நடந்த நினைவு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கலந்துகொண்டார்.

இந்த நினைவு தினத்திஅ முன்னிட்டு அப்பிராந்தியத்திலுள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆயுததாரிகளுக்கு எதிராக அடைந்துள்ள வெற்றிகளை மேலும் வலுவாக்கி அவர்களுக்கெதிராக பிடியை இறுக்குவதே இறந்தவர்களுக்கு தாம் செலுத்தக்கூடிய மிகச் சிறந்த அஞ்சலியாக அமையும் என்று பாகிஸ்தான் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் ரஹீல் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

(பிபிசி தமிழோசை)

Share This Post

Post Comment