யாழ். மாவட்டத்தில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் மையத்தினை அமைக்கவும் அதற்கான ஆலோசனைகளும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க கனேடிய அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் தெரிவித்தார்.
வடமாகாணத்திற்கான இரண்டுநாள் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த அவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்.
கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவி யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத்திட்டங்கள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டன.
இலங்கை பல்வேறு துறைகளில் அபிவிருத்திகளை கண்டுகொண்டு வரும் இத்தருணத்தில் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கனேடிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்
மேலும் சுகாதாரம் உட்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கான உதவிகளையும் வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை முன்வைக்க இருப்பதாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் தெரிவித்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் சமத்துவம் ஆன்மீகம் போன்ற பல செயற்பாடுகளை கொண்டுள்ள கனடா நாடு அதனை தன்னிறை கொண்டுள்ள மாற்றங்களை இலங்கை நாடு பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அவர்களுக்கான புதிய நடைமுறைகளை முன்னெடுக்க எப்போதும் இலங்கை அரசாங்கத்துடன் உறுதுணையாக இருப்போம் என கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
(யாழ் உதயன்)