Month: December 2015

பெஷாவர் பள்ளிகூடத் தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்து இராணுவப் பள்ளிக்கூடத்தில் நிறைய பேர் பலியான படுகொலை சம்பவத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இன்று புதன்கிழமை அந்நாட்டின் பல இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. பாகிஸ்தானின் சரித்திரத்தில் நடந்த மிகக் கொடூரமானத் தாக்குதல்களில் ஒன்றான இச்சம்பவத்தில், மாணவர்கள் ஆசிரியர்கள் அடங்கலாக நூற்றைம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் நடந்த நினைவு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கலந்துகொண்டார். இந்த நினைவு தினத்திஅ முன்னிட்டு அப்பிராந்தியத்திலுள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை…

தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே, அவர்கள் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, இந்தக் கைதிகளை…

நடைமுறை மரபு தொடரும்…..அனைவரும் அர்ச்சகராகத் தடையில்லை

உரிய பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழி செய்யும் தமிழக அரசின் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பில், தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி மட்டுமே கோவிலின் அர்ச்சகர்களை நியமிக்கும் நடைமுறை/மரபு எங்கெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதோ அங்கே அந்த நடைமுறையும் மரபும் அப்படியே தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியான நியமனங்கள் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்…

ஒன்ராரரியோ மாகாணத்தில் பியர் குடிவகை பல்பொருள் அங்காடிகளில் விற்பனை

இன்று 15 – 12 – 2015 செவ்வாய்க்கிழமை முதல் ஒன்ராரியோ மாகாணத்தில் பியர் குடிகை பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒன்ராரியோ மாகாண முதல்வர் கத்லீன் வைன் 6 குடுவைகள் கொண்ட beer மதுபானத்தை ரொரொன்ரோவிலுள்ள Loblaws வர்த்தக நிலையத்தில் இன்று கொள்வனவு செய்து விற்பனையை ஆரம்பித்துவைத்தார். முதற்கட்டமாக Loblaws, Walmart, Metro, Sobeys உள்ளடங்கலாக 13 பெரிய கடைகளில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபான விற்பனையானது இவ்வருட முடிவிற்குள் 60 கடைகளுக்கு விஸ்தரிக்கப்படவிருப்பதுடன், இவற்றில் 12…

நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சிலமாதங்களில் என்றுமில்லாதவாறு அகதி அந்தஸ்துக் கோரி நோர்வே நாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவர்களில் தொண்ணூற்றைந்து வீதமானோர் சிரியாவிலிருந்து வருவதனால் இக்கட்டான பாதுகாப்பு அடங்கலான விடயங்களைக் கைக்கொள்ள நோர்வே பாதுகாப்பு அமைச்சு தனிப் பிரிவொன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வாறு தஞ்சம் தேடி வருவோரின் கைத் தொலைபேசி, இன்ன பிற இலத்திரனியல் தொழில்நுட்ப உபகரணங்கள், உடமைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது வெளிப்பட்டவை பாதுகாப்புக்குறித்துப் பாரிய அச்சத்தையும் நெருக்குவாரத்தையும் அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. இவ்வகதிகளில் பெரும்பான்மையானோரின் கைத்தொலைபேசியில் இருந்த ISIS…

பொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாதசிங்கபிள்ளை, கனகலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும், உதயகரன், கிருபாகரன், சசிகரன், வினுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன்(கனடா), சிவானந்தன்(இலங்கை), நிர்மலாதேவி, இந்திராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஷர்மினி, பிரதீபா, நிர்மலா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,…

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையென, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கைதிகள் குறித்து பலர் பல தகவல்களை வெளியிட்டு வந்தாலும், அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டார். தமிழ் அரசியல்வாதிகள் கூறி வருவதைப் போன்று அவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்லர் எனவும், குண்டுகளை வெடிக்கச் செய்து மனித கொலைகளுக்கு உதவிய…

‘காணாமல்போனோர் ஆணைக்குழு’ நடத்தும் விசாரணை

இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் வடக்கு மாகாணத்தில் விசாரணைகளை நடத்திவருகின்றது. இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பிக்கை அளிக்கவில்லை என்று கூறி, அதன் அமர்வுகளை புறக்கணிக்குமாறு காணாமல்போனவர்களை கண்டறியும் குழுக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர். எனினும், யாழ் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அந்தக் குழுவின் விசாரணைகளில் பலர் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்திலிருந்து கிடைத்த 2500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்றாவது நாளாக இன்று ஞாயிறன்று பருத்தித்துறையில் விசாரணைகளை நடத்தியிருந்தது.…

பாகிஸ்தானில் பழங்குடிகள் 15 பேர் பலி குண்டு வெடிப்பில்!

பழங்குடிகள் பிரதேசமான குர்ரம் பகுதியின் தலைநகர் பராச்சினாரிலுள்ள துணிகள் அங்காடியில் இடம்பெற்ற இந்தக் குண்டு வெடிப்பில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு காரணமாக அந்த அங்காடி சிதறிப் போனது. இச்சமவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தமது பிடியில் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள இந்த நகரத்தில் ஷியாப் பிரிவு முஸ்லிம்களே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். எனினும் அங்கு இன ரீதியில் பல்தரப்பட்ட மக்கள் இணந்து வாழ்ந்து வந்தாலும், ஷியா மற்றும் சுன்னிப் பிரிவு…

பெண் போராளிகளுக்கு ‘பலவந்த கருக்கலைப்பு’: ஒருவர் கைது

கொலம்பியாவின் பெரிய கிளர்ச்சிப் படையான ஃபார்க் இயக்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகளுக்கு பலவந்தமாக கருக்கலைப்பு செய்துவைத்த குற்றச்சாட்டில் ஸ்பெயின் காவல்துறையினர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்-இல் மருத்துவ தாதியாக இவர் பணியாற்றி வந்துள்ளார். அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொலம்பிய அதிகாரிகள் கோரியுள்ளனர். தாங்கள் கருக்கலைப்பு செய்யவைக்கப்பட்டதாக குறைந்தது 150 பெண்கள் தங்களிடம் சாட்சியமளித்துள்ளதாக கடந்த வெள்ளியன்று கொலம்பியா தெரிவித்தது. பெண்களை மோதல் களத்தில் வைத்திருப்பதற்காக, கட்டாயமாக கருக்கலைப்பு செய்துவிடும் கொள்கையை ஃபார்க்…