Month: December 2015

அடிப்படைவாத அரசியல் குறித்து சம்பந்தன்!

வடக்கு, கிழக்கில் எவராவது அடிப்படைவாதத்தின் ஊடாக தமது அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்தால் அவர்கள் மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நீண்டகாலமாக பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுத்த வடக்கு, கிழக்கு மக்கள் தமது வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் மீளவும் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் எவராவது அடிப்படைவாதத்தின் ஊடாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்தால் அவர்களுடைய நிலைமை துரதிஸ்ட வசமானதாகவே அமையும் என்றும் அவர் கூறினார். நடைபெற்று…

சென்னை விமான நிலையம் திறக்கப்படுகிறது

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம், பகுதி அளவில் சனிக்கிழமை(5.12.15) முதல் செயல்படத் தொடங்கும் என தேசிய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்ஸா கூறியதாக பிடிஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை காலை முதல், சென்னை விமான நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சோதனை முறையில் விமானப் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ஆகியவை முன்னெடுக்கப்படும் எனவும், முதல் கட்டமாக நிவாரண உதவிகளை கொண்டு வரும் விமானங்களே தரையிறக்கப்படும் எனவும் தேசிய…

ஃபேஸ்புக் நிறுவனர் 99 சதவீத பங்குகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார்!

ஃபேஸ்புக் நிறுவனர்  Mark Zuckerberg நிறுவனத்தில் தனக் குள்ள 99 சதவீத பங்குகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். இவற்றின் மதிப்பு 4,500 கோடி டாலராகும் (சுமார் ரூ.3 லட்சம் கோடி). கடந்த வாரம் தனக்கு பிறந்த பெண் குழந்தை மாக்ஸ் பற்றி ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு இத்தகவலை வெளியிட்டுள்ளார். தனது குழந்தை வாழ்வதற்கு ஏற்ற உலகாக இப்புவி மாறு வதற்கு உதவியாக இத்தொகை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் குழந்தை பிறந்திருந்தாலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு…

ரூ. 5,000 கோடி வழங்க வேண்டும் என ஜெயலலிதா கோரிக்கை !

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய உடனடி நிவாரணமாக ரூ. 5,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் வியாழக்கிழமை பார்வையிட்டனர். பிறகு பிரதமர் மோடியை சந்தித்து மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கினார். தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நிவாரணப் பணிகளையும் எடுத்துரைத்தார். தமிழகத்தில்…

வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1,000 கோடி: சென்னையில் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக ரூ. 1,000 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. மழை, வெள்ளத்தால் இதுவரை 269 பேர் பலியாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று மாலை 3.30 மணிக்கு அரக்கோணத்தில்…

“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெளியீட்டில் த.அகிலன் ஆற்றிய உரை!

சிறப்பு முகாம் ஒரு மூடாத கல்லறை அப்படியானால் அகதிகள்? அவர்கள் உயிரோடு இருக்கும் பிணங்கள்! மத்திய அரசின் தவறா? மாநில அரசின் தவறா? என்பதை நானறியேன்! சிறப்பு முகாமில் வாழும் யாமறிந்ததெல்லாம் முகாம் சுவர் வலிது! சிறப்புமுகாமின் சித்திரவதைகளினால் ஒவ்வொரு நாளும் ஆண்டாய் கழியும் அவ்வாண்டின் நாட்களோ நீண்டு தெரியும். இந்தப்புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் தோழர் பாலன் சிறப்புமுகாமிலிருக்கும் போது எழுதிய வரிகள் இவை. அகதிகள் எனும் பெயரைத் தமிழுலகில் அதிகமும் பிரபலப்படுத்திய சமூகமாக நாம்…