Month: August 2016

உரிமைக்காக குரல் உயர்த்திய தமிழக விவசாயிகள்!

காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை  தமிழகம் முழுவதும் விவசாய அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நட்த்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் விவசாயிகள் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம்…

அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்

அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள் -அ.ராமசாமி- மானுடவியல் அறிஞர் விக்டர்டர்னர் ‘சடங்கிலிருந்து அரங்குக்கு’ (From Ritual To Theatre) என்றொரு புகழ் மிக்க சொற் றொடரைப் பயன்படுத்தியுள்ளார். சடங்குகளிலிருந்து தான் நாடகக்கலை உருவாகியது என மேற்கத்தியச் சிந்தனை களும்  அதன் வழியான ஆய்வுகளும் சொல்லியுள்ளன. உலகத்திலுள்ள நாடகப் பள்ளி களும் நாடக ஆர்வலர்களும்  ஓரளவு அது உண்மைதான் என ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த ஒத்துக் கொள்ளலின் பேரில் அரங்கச் செயல்பாடுகளுக்கு-குறிப்பாக நடிப்புக்கான பயிற்சிகளுக்கு- மரபான சடங்குநிகழ்வுகளோடு…

பெயர் மாறுமா மேற்கு வங்கம் ?

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தை ஆளும் திரினமுல் காங்கிரஸ் இந்த பெயர் மாற்றத்தில் தீவிரமாக இருந்தபோது பாஜக மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 169வது விதிப்படி குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில்  நிறைவேற்றினர். இதுகுறித்து கூறிய மம்தா பேனர்ஜி ”மேற்கு வங்கம் என்ற பெயரை ஆங்கிலத்தில் பெங்கால் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த…

ஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் !

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கிளிநொச்சியில் கருத்து தெரிவி க்கும் போது வடமாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்து இருந்தார். இக் கருத்து தொடர்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கும் போது, வடமாகாண கல்வி அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் மட்டுமே, அப்படி  இருக்கையில் எவ்வாறு 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திரும்பும் ? ஆளூநர் தவறுதலாக…

கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைப்பு!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் 210 ஆவது கிலோமீற்றர் கல்லிற்கு முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றடி உயரமான புத்தர் சிலை ஒன்றும், ஒன்றரை அடி உயரமான புத்தர்சிலை ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என…

முன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது!

கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே இவ்வாறு கைது செய்யப்ப ட்டுள்ளார். இன்று பிற்பகல் மூன்று மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் குறித்த முன்னாள் போராளியை ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விலங்கிட்டு…

பான் கீ மூன் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திப்பார்!

இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை இலங்கை வரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை வெள்ளிக்கிழமை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்தச் சந்திப்பில் பங்குகொள்வார்கள். இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மைக்கலோலே முதலமைச்சருடன் இன்று காலை தொடர்பு கொண்டு இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பான் கீ மூனுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்க ளையடுத்து, வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணியளவில் முதலமைச்சருடனான சந்திப்பு…

பதினொரு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது !

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பதினொரு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் காரணமாக அந்தக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம், யாழ். மாவட்டச் செயலகத்தால் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 171 குடும்பங்களுக்கு நேற்று விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடிதங்களைக் கொண்டு சென்ற கிராம சேவையாளர்களுக்கு நலன்புரி…

சோமாலியாவில் அதிபரின் அரண்மனை அருகே குண்டு வெடிப்பு!

சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவின் மத்திய பகுதியில் ஒரு விடுதிக்கு வெளியே, அதிபரின் அரன்மணை கதவுகளுக்கு அருகில் பெரிய டிரக் குண்டு ஒன்று வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமியவாத அமைப்பான அல் ஷபாப் தெரிவித்துள்ளது. நகரத்தின் முக்கிய மருத்துவமனையில் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; அதில் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் அடங்குவர்;அந்த விடுதிக்கு அருகில் பாதுகாப்பு கூட்டம் நடைபெறவிருந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீப வருடங்களில் இந்த விடுதி அல் ஷபாப் அமைப்பால்…

எவரெஸ்றை  எட்டியதாக ஏமாற்றியவர்களுக்கு தடை!

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய தம்பதியினர் என்று உரிமை கோரி ஏமாற்றியவர்களுக்கு, நேபாள அரசு மலையேறுவதற்கு பத்து வருட தடை விதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து திங்களன்று முடிந்த விசாரணையில், அந்த தம்பதியினர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட புகைப்படம் போலியானது என்று தெரியவந்துள்ளது. இந்த தடை, மலையேறுபவர்களை போலியான மற்றும் நேர்மையற்ற நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த தம்பதி, மே மாதத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை…